பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-வது நாளான நேற்று கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற் றன.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முக்கிய பாடமான கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறிய தாவது:
``1 மார்க், 10 மார்க் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. 6 மார்க் கேள்விகள் மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தன.”
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
பொறியியல் கட் ஆப் கணக்கீட்டில் கணித மதிப்பெண் முக்கிய இடம் வகிக்கிறது. மொத்தமுள்ள 200 மதிப்பெண்ணில் 50 சதவீதம் (100 மார்க்) கணித மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கணிதத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ - மாணவிகள் கூறியிருப்பதால், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளது.