தமிழகம்

ஆண்மைக்குறைவால் திருமண முறிவு ஏற்படுவதை தடுக்க ‘மாரத்தான்’விசாரணை: சமூக பிரச்சினைக்காக விடுமுறையில் கூடிய உயர் நீதிமன்றம்

கி.மகாராஜன்

சமூகத்தை மிரட்டும் ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சி னைக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிறப்பு விசாரணை நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த விசாரணையில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்கள், ஆண்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

போடியைச் சேர்ந்த இளைஞரை, திருச்சியில் கல்லூரி விரிவுரையாளரான பெண் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாளில், தன் கணவர் ஆண்மைக்குறைவை மறைத்து திருமணம் செய்து கொண்டதாக திருச்சி சமூக நலத்துறையில் புகார் அளித்தார். திருச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரி கணவர் வீட்டினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மை காரணங்களால் ஏராள மான திருமணங்கள் தோல்வியில் முடிவதைத் தடுக்க, ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரி சோதனை செய்வதை ஏன் கட்டாய மாக்கக்கூடாது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இப்பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி என்.கிருபாகரன் முன் சனிக்கிழமை சிறப்பு விசாரணை நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் இரு பெண்கள் நீதிபதி முன் ஆஜராகி, தங்களது மருமகன்களின் ஆண்மைக்குறைவால் தங்கள் மகள்கள் பாதிக்கப்பட்டதை தெரிவித்தனர். அவர்களை தேற்றிய நீதிபதி, அதற்காகத்தான் இந்த சிறப்பு விசாரணை என்றார்.

பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு: வழக்கறிஞர்கள் வீராகதிரவன், பீட்டர் ரமேஷ்குமார், திருநாவுக்கரசு, எழிலரசு ஆகியோர் கூறும்போது, திருமணம் செய்யப்போகும் ஆணுக்கு பெண் வீட்டார் நியமனம் செய்யும் மருத்துவர் மூலமாகவும், பெண் ணுக்கு ஆண் வீட்டார் நியமனம் செய்யும் மருத்துவர் மூலமாகவும் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட நபர் பாலியல் உறவுக்கு தகுதியான வரா? எச்ஐவி, எய்ட்ஸ் உள்ளதா? என்பதை கண்டறிய முடியும். திரு மணத்துக்கு முந்தைய மருத்துவ கட்டாய பரிசோதனை சட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கு, அது சாத்தியமான முறையில் இருக்க வேண்டும் என்றனர்.

வழக்கறிஞர் லஜபதிராய்:

பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடு களில் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே அங்கு திருமணத்தை பதிவு செய்ய முடியும். பாலியல் உறவு என்பது மனவியல் சார்ந்தது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர் ராமச்சந்திரன்:

ஒருவர் திருமணத்துக்கு தகுதியானவரா என்பதை கண்டுபிடிக்கும் சோதனைக்கு அதிக செலவாகும். இந்த சோதனை 3 நாள் நடை பெறும். பாலியல் உறவு மனவியல் தொடர் பானது. மன ரீதியாகவும் ஒருவர் பாலியல் உறவுக்கு தயாராக வேண்டும். எனவே, திருமணத் துக்கு முன் ஆணுக்கும், பெண்ணுக் கும் பாலி யல் கல்வி, விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு அளிக்க வேண்டும்.

மனநல மருத்துவர் சி.ராமசுப்பிர மணியம்:

திருமணத்துக்கு முந்தைய கலந்தாய்வு அவசியம். 60 சதவீத திருமணங்கள் பாலியல் ஒவ்வாமை யால் தோல்வியில் முடிகின்றன. இதை முன்கூட்டியே கண்டுபிடித் தால் மனமுறிவுகளை தடுக்கலாம். திருமணத்துக்கு முந்தைய கலந்தாய்வுக்காக தனி மையம் ஏற்படுத்த வேண்டும்.

பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆண்மைக்குறைவு உள்ளவருக்கு, முழு உடல் தகுதியுடன் இருப்ப தாக மருத்துவர்கள் சான்று அளிக் கின்றனர். ஆண்மைக் குறைவை தடுக்க சட்டம் கொண்டுவருவதாக இருந்தால் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர் களை தண்டிக்க அதில் வழி செய்ய வேண்டும் என்றார்.

மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, பாலியல் உறவு மனம் சம்பந்தப்பட்டது. திருமணத் துக்கு முந்தைய மருத்துவ பரிசோத னையால் ஆண்மைக் குறைவை சரிசெய்ய முடியாது. எந்த நாட்டிலும் கட்டாய ஆண்மை பரிசோதனை சட்டம் அமலில் இல்லை. எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்பை கண்டுபிடிக்கும் சோதனை தான் கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்றார். மற்றொருவர் பேசும்போது, எச்ஐவி பரிசோதனை கூட கட்டாயமாக்கப்படவில்லை. அவர்களாகவே முன்வந்த பரிசோதனை செய்யும்படித் தான் கூறப்படுகிறது. கட்டாய ஆண்மை பரிசோதனை என்பது இயலாத காரியம் என்றார். இதையடுத்து அடுத்த விசாரணையை செப்டம் பர் 18-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

கலாச்சாரத்தில் வழியுண்டு

தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் திருமணத்துக்கு ஆண், பெண்ணுக்கு விருப்பம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில சடங்குகள் உள்ளன. இந்த சடங்குகளில் ஆண் மற்றும் பெண்களை பங்கேற்கச் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆண், பெண் ணுக்கு திருமணத்தின் மீதுள்ள விருப்பங்கள், அவர்களிடமுள்ள பாலியல் தூண்டல்கள், உணர்வு கள் மறைமுகமாக கண்டுபிடிக் கப்படும். கால மாற்றம் காரணமாக தற்போது அந்த சடங்குகள் மறைந்துவிட்டன. தமிழர்களின் கலாச்சாரத்தை பின்பற்றி திருமணம் நடத்தினாலே, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை பிரச்சினை எழாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

முக்கியத்துவம் வேண்டாம்

மருத்துவர் அசோகன் கூறியதாவது: ‘ஒரு சதவீதம் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஒரு சதவீதம் பேருக்காக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டியதில்லை. பாலியல் உறவு வெறும் 7 நிமிடம் நீடிக்கும் உணர்வு. அதற்காக எஞ்சிய 23.53 மணி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. 7 நிமிட உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் வழங்காமல், அதை புறக்கணித்துவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். கணவன், மனைவி இடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்துவிடும்’ என்றார்.

SCROLL FOR NEXT