தமிழகம்

பருவமழை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்

செய்திப்பிரிவு

தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு சராசரியான அளவிலேயே பெய்யக்கூடும் என்று சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை தொடரும். கடந்த ஜீன் மாதம் முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை தமிழகத்தில் பதிவான நிலவரப்படி 241.6 மி.மீ மழை பெய்துள்ளது. இது எதிர்பார்த்த மழை அளவை விட 8 சதவீதம் குறைவாகும். தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரியில் 858.9 மி.மீ மழை பெய்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “ 8 சதவீதம் குறைவாக இருந்தாலும் இது சராசரியான மழை அளவே ஆகும். எதிர்பார்த்ததை விட 19 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ மழை அளவு இருப்பது சகஜம். இந்த பருவ மழைக் காலத்தில் சராசரியான மழையே பெய்யும்” என்றார்.

SCROLL FOR NEXT