மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதில், மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார்.
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் மற்றும் பாமக வேட்பாளர் சாம் பால் ஆகியோர் போட்டியிட்டனர். மத்திய பாஜக ஆட்சியில் வேலையின்மை, பண மதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கூறி தயாநிதி மாறன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.