ஓட்டு எண்ணும் முன்பே ஓபிஎஸ் மகனை தேனிக்கு எம்பியாக பிரகடனம் செய்துவிட்டார்கள்.
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரன் கோயில் அருகே உள்ள காசி அன்னபூரணி ஆலயத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் திருப்பணிக்கு பேருதவி புரிந்தவர்களின் பட்டியல் இருக்கிறது.
ஓபிஎஸ்ஸும் அவரது இரு மகன்களும் மட்டுமே இடம் பிடித்திருக்கும் இந்தப் பட்டியலில், தேனி தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ’தேனி பாராளுமன்ற உறுப்பினர்’ என்று பட்டவர்த்தனமாகப் போட்டிருக்கிறார்கள். மன நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் இரா.வேல்முருகன் தான் கல்வெட்டு உபயமாம்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெயலலிதா சமாதியில் தியானமெல்லாம் இருந்து அசத்திய வேல்முருகன், “நான்தான் கல்வெட்டை வைத்தேன். ‘தேனி பாராளுமன்ற வேட்பாளர்’னு போடச்சொன்னேன். தப்பா போட்டுட்டாங்க” என்கிறார்.
இவ்வளவு தெளிவா பேசும் மனுசனையா மனநலம் பாதித்தவர் என்கிறார்கள்? விஷயம் வில்லங்கமாகிறது என்றதும் அந்தக் கல்வெட்டை அகற்றிவிட்டு அவசர அவசரமாய் வேறொரு கல்வெட்டை வைத்திருக்கிறார்கள்!