தமிழகம்

அண்ணனும் தங்கையும் சேர்ந்து வாக்கு கேட்க வந்திருக்கிறோம்: பிரச்சாரத்தில் பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்

செய்திப்பிரிவு

அண்ணனும் தங்கையும் இணைந்து ஓட்டுக் கேட்டு வந்திருக்கிறோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று (வெள்ளிக்கிழமை) கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம், கட்டாலங்குளம், முடிவித்தானேந்தல் பகுதிகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக பல பிரிவுகளாக உடைந்து, பிரிந்து சென்று இன்றைக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில்தான் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதன்முதலில் உள்ளாட்சி அமைப்பின் தேர்தலை நடத்தப் போகிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து இருக்கின்றோம். நம்முடைய தலைவர் கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த இந்த ஆட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனிடையே, பிரச்சார வாகனத்தில் இருந்த கனிமொழியை நோக்கி, "அண்ணனும் தங்கையும் இணைந்து ஓட்டுக் கேட்டு வந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும், அண்ணன் தங்கைகளாகத்தான் நினைக்கின்றோம்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT