தமிழகம்

அரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் முன்னிலை

செய்திப்பிரிவு

அரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி, அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுமார் 60,239 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏகே.மூர்த்தி 31,208 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஏகே.மூர்த்தியை விட சுமார் 29,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெகத்ரட்சகன் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

SCROLL FOR NEXT