தமிழகம்

ஜப்பான் செல்ல தமிழக பள்ளி மாணவர்கள் 7 பேர் தேர்வு: மாணவர் பரிமாற்ற திட்டத்தின்படி நடவடிக்கை

செய்திப்பிரிவு

ஆசிய நாடுகளுடனான நல்லுறவை வளர்க்கவும், மாணவர்கள், இளைஞர்கள் இடையே இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தவும் ஜப்பான்-கிழக்கு ஆசிய மாணவர்-இளைஞர் பரிமாற்ற திட்டம் (ஜெனிசிஸ்) என்ற சிறப்பு திட்டத்தை ஜப்பான் அரசும், அந்நாட்டு தூதரகமும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

இதற்கு தேர்வு செய்யப்படும் பள்ளி மாணவர்களும், இளைஞர் களும் ஜப்பான் சென்று தங்கள் நாட்டு கலை-கலாசாரம், வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வார்கள். பள்ளி மாணவர்களைப் பொருத்தவரை யில், கலாச்சாரம், விளையாட்டு என இரு பிரிவுகளின்கீழ் இந்த திட்டத் துக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக மாணவ-மாணவிகள் ஜெனிசிஸ் திட்டத்தில் பங்கேற்க பள்ளிக் கல்வித்துறை அதிக ஊக்கமளித்து வருகிறது. அந்த வகையில், ஜெனிசிஸ் திட்டத்தில் இந்த ஆண்டு ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக மாணவ-மாணவிகளின் 7 பேர் அடங்கிய பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

கலை-கலாச்சாரப் பிரிவு

1. எஸ்.பிரபாகரன், பி.வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர், திருப்பூர்

2. எஸ்.சில்வியா, எஸ்.பி.எம். மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை

3. டி.யோகேஸ்வரி, அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி, குன்னத் தூர், திருப்பூர்

விளையாட்டுப் பிரிவு

1. வி.ரோகித், செயின்ட் பீட்டர் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம், சென்னை (கூடைப்பந்து)

2. ஆர்.ராமகிருஷ்ணன், கோல் டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏற்காடு (டென்னிஸ்)

3. கே.அருண் வெங்கடேஷ், எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோவில் (டென் னிஸ்)

4. எம்.காயத்ரி, செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, ஏ.என்.மங்களம், சேலம் (கைப்பந்து)

மேலும், மாணவர்களுடன் மேற்பார்வையாளராக செல்வதற்கு சென்னை அருகேயுள்ள வேலப்பன் சாவடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT