தமிழகம்

ஏப்ரல் 18-ல் ஆளும் பாஜக அரசும் தூக்கி எறியப்படும்: கனிமொழி

ஸ்கிரீனன்

ஏப்ரல் 18-ல் ஆளும் பாஜக அரசும் தூக்கி எறியப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில்  கனிமொழி தெரிவித்துள்ளார்

எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து பாமக, எட்டுவழிச்சாலை எதிர்ப்புக் குழு உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இதன் தீர்ப்பு நேற்று (ஏப்ரல் 8) வெளியானது.

இத்தீர்ப்பில் எட்டுவழிச்சாலை திட்ட அரசாணைக்கு தடை விதிக்கப்பட்டு திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சேலம் எட்டு வழி சாலைக்காக  நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருந்த கற்களை பிடுங்கி எறிந்தார்கள்.இந்த ஆளும் அராஜக அரசும் இதே போல் ஏப்ரல் 18 அன்று தூக்கி எறியப்படும்

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT