“தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து நீங்களே நில்லுங்கள்” என்று தினகரன் சொன்னபோது, “அந்த அளவுக்கு என்னால்செலவழிக்க முடியாது.
அப்படியேநிண்டாலும் தோத்துப் போயிருவேன்” என்று மறுத்தாராம் தங்கதமிழ்செல்வன். அதற்கு, “அப்படின்னா வேற ஒருத்தர நீங்களே சொல்லுங்க” என்றாராம் தினகரன்.
”விவேக் ஜெயராமனை நிறுத்துங்க. அவரும் ஜெயிப்பாரு; ஆண்டிபட்டியில என்னையும் ஜெயிக்க வெச்சிருவாரு” என்று தங்கம் சொன்னாராம்.
அதற்கு, “குடும்ப அரசியல் பத்தி பேசிக்கிட்டு நம்மளே குடும்பஅரசியல் பண்ணா நல்லா இருக்காது” என்று சொன்ன தினகரன் மறுநாள், தங்கத்தைக் கேட்காமலேயே அவரை தேனிக்கு வேட்பாளராக அறிவித்துவிட்டாராம்.