தமிழகம்

விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த எல்.கே.சுதீஷ்: களை எடுப்பது எப்படி என அறிந்துகொள்ள ஆர்வம்

என்.முருகவேல்

சின்னசேலம் பகுதியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் வாக்கு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், இன்று (வியாழக்கிழமை) சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது தென் செட்டியந்தல் கிராமத்தில் விளைநிலப் பகுதியில் களையெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் சென்று வாக்கு கேட்டார்.

அப்போது, "என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள், இதற்கு என்ன ஊதியம் என்ற கேட்டதோடு, அந்த ஊதியம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக உள்ளதா?" என குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர்களது பதிலுக்குப் பின், "எனக்கு வாக்களித்தால், இப்பகுதி விவசாயத்தை மேம்படுத்துவதோடு, உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுப்பேன்" எனக் கூறி, அவர்களிடமிருந்த மண்வெட்டியினால், களை எடுப்பது பற்றி தெரிந்து கொண்டார்.

SCROLL FOR NEXT