தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனைவிகள், திண்டுக்கல் தொகுதியில் தங்கள் கணவர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் உறவினர்கள் வசிக்கும் பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனின் மனைவி பஞ்சவர்ணம், தனது உறவினர்கள் அதிகம் வசிக்கும் வத்தலகுண்டு, தும்மலப்பட்டி, ஆத்தூர், ரெட்டியார் சத்திரம் ஆகிய பகுதிகளில், குடும்ப உறுப்பினர்களுடன் வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர் உதய குமாரின் மனைவி விமலாராணி, தனது உறவினர்கள் அதிகம் வசிக்கும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, திண்டுக்கல் டவுன், நத்தம் ஆகிய பகுதிகளில் குடும்ப உறுப்பினர்களுடன் வீடு, வீடாகச் சென்று கணவருக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இவர்களது பிரச்சாரம், உறவினர்கள் நிறைந்த கிராமங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.