பிரதமர் நரேந்திர மோடியின் 64-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தேசத் தொண்டை தொடர, இறைவன் தங்களுக்கு உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.