ராமநாதபுரத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.99% வாக்குப்பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர் தனது சொந்த ஊரான நெல்லையில் வாக்களித்தார்.
திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவர் சாயல்குடி குறுவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்களித்தார்.
அமமுக வேட்பாளர் வதுந ஆனந்த் மனக்குடியில் உள்ள பியு நடுநிலைப்பள்ளியில் வககளித்தார்.
அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரத்திலுள்ள அறிஞர் அண்ணா மேல் நிலைப்பள்ளியில் வாக்களித்தார். ராமநாதபுரத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.99% வாக்குப்பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பரமக்குடியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பரமக்குடி அமமுக வேட்பாளர் முத்தையா ஆர்.சி மேல் நிலைப்பள்ளியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் சம்பத் குமார் பரமக்குடியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளார் சதன் பிரபாகர் பேரையூர் கிராம அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 15.23% வாக்குப்பதிவாகியுள்ளது.