ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்து தர்மயுத்தம் நடத்திய எம்பிக்கள் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், மகனுக்கு சீட் வாங்குவதற்கு காட்டிய அக்கறையை மற்றவர்களுக்காகக் காட்டவில்லை ஓபிஎஸ். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வாங்கித் தருவார் என ஓபிஎஸ்ஸை மலைபோல நம்பினார் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம்.
ஓபிஎஸ்ஸும் அதற்காக முயற்சி எடுத்தார். ஆனால், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தனித் தனி ரூட்டில் முத்துராமலிங்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டதால், ஓபிஎஸ்ஸின் குரல் எடுபடாமல் போய், செல்லப்பாவின் விசுவாசியான முனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.
இதை எதிர்த்து மதுரை அதிமுகவுக்குள் மல்லுக்கட்டு தொடங்கியிருக்கும் அதே நேரம் ஓபிஎஸ்ஸையும் கருக வறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.