முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தித்து பேசினர்.
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த முதல்வரை அரசு அதிகாரிகள் சந்தித்து பேசினர். பின்னர் தமிழக டிஜிபி ராமானுஜம், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் (சட்டம்-ஒழுங்கு), சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். சுமார் 5 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.