தமிழகம்

18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக 11 தொகுதிகளில் வெற்றிப்பெற வாய்ப்பு: பண்பாடு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பில் தகவல்

செய்திப்பிரிவு

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதியில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பண்பாடு மக்கள் தொடர்பகம்' தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில், எந்த கட்சி எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்பை 'பண்பாடு மக்கள் தொடர்பகம்' இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 3 வரை 40 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், லயோலா கல்லூரி முன்னாள் மாணவருமான சி.திருநாவுக்கரசு வழிகாட்டுதலின் பேரில் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதியில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது எனவும், அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது எனவும், அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றிப்பெறும் வாய்ப்பு முன்னிலையில் உள்ளது எனவும், கணிக்க முடியாத தொகுதிகளாக 2 தொகுதிகள் உள்ளது எனவும் அக்கருத்துக்கணிப்பு கூறுகிறது.

SCROLL FOR NEXT