தமிழகம்

செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி: ஏப்ரல் 7-ல் அறிமுக வகுப்பு

செய்திப்பிரிவு

எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை செங்கல்வராய அறக்கட்டளை நடத்துகிறது. இதற்கான அறிமுக வகுப்பு ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இது  தொடர்பாக செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு காவல்துறை சார் ஆய்வாளர், மத்திய அரசின் எஸ்எஸ்சி  மற்றும் ஆதார் திட்டத்தின் கீழ் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இத்தேர்வை பட்டதாரிகள் எழுதலாம்.

பொதுவாக எஸ்எஸ்சி தேர்வுகள் குறித்து தமிழக மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. இத்தேர்வெழுதி மத்திய அரசுப் பணியில் சேரலாம். ஆனால், இதுகுறித்து மாணவர்களிடம் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

எனவே, மத்திய அரசுப் பணிகளில் சேர வகை செய்யும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கல்வராய நாயக்கர் அறக்கட் டளை சார்பில் அறிமுக வகுப்பு ஏப்ரம் 7-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு வேப்பேரி, 2,3 ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பி.டீ.லி. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடத்தப்படும்.

அறிமுக வகுப்பைத் தொடர்ந்து எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-26430029 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 8668038347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT