தமிழகம்

பத்திரிகை சுதந்திரம், பாதுகாப்புக்கு சட்ட திருத்தம் அவசியம்: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பத்திரிகை சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு சட்ட புனரமைப்பும், அரசியலமைப்புச் சட்ட திருத்தமும் அவசியம் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகை சுதந்திர தின கொண்டாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தினார்.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை (மே 3) முன்னிட்டு ‘ஜஸ்ட் அவுட் நியூஸ்’ மற்றும் ‘இப்போது’ என்ற இணையதள பத்திரிகை சார்பில் ‘மூத்த பத்திரி கையாளர் என்.ராமுடன் பத்திரிகை சுதந்திர தின கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகையாளர் பீர்முகமது வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து ‘தி இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவ ரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பத்திரிகை என்பது 200 ஆண்டு கள் பழமையானது. பத்திரிகை சுதந்திரத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கி யுள்ளது. குறிப்பாக 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பத்திரிகை சுதந்திரம் குறைந்துள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தை பொறுத்தவரை 183 நாடுகளில் இந்தியா 140-வது இடத்தில் உள் ளது. 2017-ம் ஆண்டு 136-வது இடத்தில் இருந்தது.

ரஃபேல் போர் விமான விவ காரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தில் நடந்த வழக்கு விசாரணை யின்போது மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து பத்திரிகை சுதந்திரத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. 1990-ம் ஆண்டு முதல் இதுவரை உலக அளவில் 1,332 பத்திரிகையாளர்கள் கொல் லப்பட்டுள்ளனர். இந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் மட்டும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து கூறும் உரிமை பத்திரிகை யாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இருக்க வேண் டும். இதழியலில் புலனாய்வு அவசியம். இது கஷ்டமான பணி தான். இருந்தாலும் தற்போதைய சூழலில் புலனாய்வு அவசியம். குறிப்பாக தமிழகத்துக்கு சுதந்திர மான புலனாய்வு வேண்டும். பத்திரிகை துறையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருப் பது வரவேற்கத்தக்கது. ஆனால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின ரின் பங்களிப்பு குறைவாக உள் ளது

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பத்திரிகையின் வரலாறு குறித்த காட்சிப் படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சி யில், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

          
SCROLL FOR NEXT