பெரியாரின் 136-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழக தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்திற்கு அதிமுக சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியார் திடலில் உள்ள பெரியாரின் நினைவிடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.