காங்கிரஸிலிருந்து விலகியதாக வதந்தி வெளியானதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு விளக்கமளித்துள்ளார்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு எந்தவொரு பிரச்சாரத்திலுமே கலந்து கொள்ளவில்லை. அவருடைய அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தினால் அவரால் பிரச்சாரம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
குஷ்பு பிரச்சார களத்தில் இல்லை என்றவுடன், அவர் காங்கிரஸிலிருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் பரவியது. இச்செய்தி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு தெரிவித்துள்ளதாவது:
நான் காங்கிரஸிலிருந்து விலகுகிறேனா? எங்கிருந்து இதெல்லாம் வருகிறது? இந்த நாட்டை உருவாக்கிய ஒரு இயக்கத்தின் அங்கம் நான். காங்கிரஸ் ஊழியராக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். நான் ராகுல் காந்தியை நம்புகிறேன். நான் நாளை தென் மாநிலங்கள் முழுவதும் பிரச்சாரம் தொடங்குகிறேன். ஐ யாம் காங்கிரஸ்
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.