தமிழகம்

மோடிக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் கூறவில்லை: ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் பேட்டி

இரா.கார்த்திகேயன்

மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறாரே தவிர அவருக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் கூறவில்லை என, ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்தார்.

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள சித்திரகுப்தர் கோயிலில் இன்று (திங்கள்கிழமை) வழிபாடு செய்த பின் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "மே 23-க்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும். அவர் சொன்னபடியே சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவார்.

மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை.

ரஜினி - கமல்ஹாசன் நட்பு எப்போதும் நிலைக்கும். அரசியலுக்கு கமல் முன்கூட்டியே வந்துவிட்டார், ரஜினிகாந்த் விரைவில் வருவார்", என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT