தமிழகம்

அப்பா சொல்லித்தரலியா: ஸ்டாலின் பேச்சை கிண்டல் செய்த எஸ்.வி.சேகர்

ஸ்கிரீனன்

தமிழிசை தொடர்பான ஸ்டாலின் பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.

மக்களவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து தொகுதிக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, “பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு தூத்துக்குடி தொகுதிதான் கிடைத்ததா. வசமாக வந்து மாட்டிக் கொண்டீர்களே. தோற்பதற்காகவே வந்துள்ளீர்களா, டெபாசிட் இழக்கப் போகும் அவருக்கு எனது அனுதாபத்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கட்சியே சதி செய்து அவரை இங்கே தள்ளிவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இது செய்தியாக வெளியானது. இதனைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர்  தெரிவித்திருப்பதாவது:

டெபாசிட் இழப்பதற்காகவே தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் போட்டியிடுகிறார்: ஸ்டாலின் - உங்களுக்கு ஆர்.கே.நகர்ல ஆனது மறந்து போச்சா.  கூட்டமெல்லாம் ஓட்டா மாறாதுன்னு அப்பா சொல்லித்தரலியா.  இந்த தேர்தலில் ஒரு மவுனப்புரட்சி நடக்கும்.  பாருங்கள். இல்லை வீரமணி சொல்வார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT