சாத்தூர் அருகே அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.43 லட்சத்தை நேற்று மாலை பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர் பாக அமமுக நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். ஆண்டிபட்டியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.1.48 கோடி பறி முதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் 4 பேரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட் டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சுப்பிரமணியன் போட்டி யிடுகிறார். இவரது சொந்த ஊர் சாத்தூர் அருகேயுள்ள எதிர்கோட்டையாகும். இங்கு வேட்பாளர் சுப்பிரமணியனின் வீட் டின் அருகே அமமுக தேர்தல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இங்கு திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகி மகாதேவன் என்பவரிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்பேரில் அருகில் இருந்த தென்னந்தோப்பில் ரூ.33 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், சுப்பிரமணியன் வீட்டிலும் அதி காரிகள் சோதனை நடத்தினர். பறிமுதல் செய்த ரூ.43 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து பின்னர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகாதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
150 பேர் மீது வழக்கு
இதேபோன்று, தேனி மாவட்டம் ஆண்டி பட்டியில் உள்ள அமமுக அலுவலகத் தில் தேர்தல் அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் டிஎஸ்பி சீனி வாசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப் போது அமமுக கட்சியினர் அதிகாரி களைத் தாக்க முயற்சிக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின் னர் அங்கிருந்து ரூ.1.48 கோடியை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்பி பாஸ்கரன் உட் பட பலர் நேரில் வந்து சம்பவ இடத் தைப் பார்வையிட்டனர். இதுதொடர்பாக அமமுக தேனி மாவட்ட துணைத் தலைவர் பழனி, நிர்வாகிகள் சுமன், மது, பிரகாஷ்ராஜ் ஆகியோரை போலீ ஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி சிறையில் அடைத் தனர். இவர்கள் 4 பேர் உட்பட 150 பேர் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அவதூறா கப் பேசுதல், அரசு ஊழியர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், வன்முறை யில் ஈடுபடுதல், கூட்டுச் சதியில் ஈடுபடு தல், ஆயுதங்கள் இல்லாமல் தாக்க முயற் சித்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமமுக மறுப்பு
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான வணிக வளா கத்தில்தான் அமமுக அலுவலகம் செயல் பட்டு வந்தது. இந்த வணிக வளாகத் தின் உரிமையாளர் அதிமுக வேட்பாள ருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி இங்கு பணத்தை வைத் திருக்க முடியும். இது எல்லாமே அதிமுக வினரின் திட்டமிட்ட சதியாகும். அதிமுக வினர் தொகுதியின் அனைத்து இடங்களி லும் போலீஸாரின் துணையோடு வாக் காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து விட்டனர். இதுகுறித்து, நான் தேர்தல் ஆணையத்திடமும், தேர்தல் நடத்தும் அலுவலரான தேனி ஆட்சியரிடமும் பல முறை புகார் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அந்தப் புகார் மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் கட்சியினர் 150 பேர் மீது வழக்குப் பதிவும் செய்துள்ளனர். வாக்குப்பதிவின்போது வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் எங்கள் கட்சியினரை கைது செய்யவும் திட்ட மிட்டுள்ளனர் என்றார்.
இந்நிலையில், தேர்தல் விதிமீறி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தாக ஆண்டிபட்டி போலீஸார் தங்க தமிழ்ச் செல்வன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் அமமுக பிரமுக ரின் அலுவலகத்தில் சுமார் ரூ.1.5 கோடி யும் சாத்தூரில் அமமுக வேட்பாளர் சுப் பிரமணியத்தின் அலுவலகம், தோட்டம் ஆகிய இடங்களில் ரூ..43 லட்சமும் சிக்கி யது. இது குறித்தும் கரூரில் மாவட்ட ஆட்சி யர் மிரட்டப்பட்டது குறித்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் விளக்க அறிக்கை கோரியது. இது தொடர்பாக நேற்று தமிழகம் வந்த செலவின சிறப்பு பார்வையாளர் மதுமகாஜனுடன் ஆலோசித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, பின்னர் முதல்கட்ட அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.