தமிழகம்

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு: இரு தொகுதிகளில் பெண்கள் போட்டி

செய்திப்பிரிவு

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் மே 19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 'விவசாயி' சின்னத்தில், போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

சூலூர் - வழக்கறிஞர் வெ.விஜயராகவன்

அரவக்குறிச்சி - பா.க.செல்வம்

திருப்பரங்குன்றம் - இரா.ரேவதி

ஓட்டப்பிடாரம் (தனி) - மு.அகல்யா  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

SCROLL FOR NEXT