திருவள்ளூர் அருகே 2 வேன்களில் எடுத்துச் செல்லப்பட்ட 1,381 கிலோ தங்கக் கட்டிகளை தேர்தல் பறக் கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தலையொட்டி வாக்காளர் களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் நோக்கில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர் தல் நிலை கண்காணிப்புக் குழு வினர், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது, வாகனங்களில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப் படும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வரு கின்றன.
இந்நிலையில், நேற்று இரவு, திருவள்ளூர் அருகே புதுசத்திரம் பகுதியில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையிலான தேர்தல் பறக் கும் படையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையிலி ருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கிச் சென்ற 2 வேன்களை மறித்து, பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அச்சோதனையில், வேன்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட இரும்பு பெட்டிகளில் 1,381 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அப்போது, காரில் இருந்த ஆயுதம் ஏந்திய காவலர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 6 பேர், உரிய ஆவணங் களுடன், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக திருப்பதி தேவஸ்தானத் துக்கு தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர்.
இருப்பினும், தங்கக் கட்டிகள் மற்றும் 2 வேன்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவற்றை, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எடுத் துச் சென்றனர். அங்கு, பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, திருவள்ளூர் சார் ஆட்சியர் ரத்னா, பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி ஆகியோர், பறிமுதல் செய்யப் பட்ட தங்கக் கட்டிகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வரு கின்றனர்.
மேலும், "பறிமுதல் செய்யப் பட்ட தங்கக் கட்டிகள் தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அதன் பிறகு, தங்கக் கட்டிகள் விடுவிக்கப்படும்" என, தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பதி தேவஸ் தானம் அதிகாரிகளிடம் கேட்ட போது, "திருவள்ளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் திருப்பதி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டவை. இதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டி நகைகளை திருப்பதிக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடக்கின்றன" என்றனர்.