தமிழகம்

மண்பாண்ட தொழிலாளர் சங்கம் திமுகவுக்கு ஆதரவு

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மண்பாண்டத் தொழி லாளர்களுக்கு நல வாரியம் அமைத்தார். மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் நாட்டை சீரழித்து விட்டன. மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகின்றன. இவர்கள் ஆட்சியால் யாருக்கும் பயன் இல்லை. இருகட்சிகளின் தேர்தல் அறிக்கை இதையே உணர்த்துகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகள் உள்ளன.

எனவே, வரும் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT