பாடியில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அம்பத்தூரை அடுத்த பாடி குமரன் நகர், முல்லை தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்(43). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், தேமுதிக வில் பொறியாளர் அணியின் இணைச் செயலாளராக இருந் தார். தேமுதிக சார்பில் சட்டப் பேரவை வேட்பாளராக 2 முறை போட்டியிட்டுள்ளார்.
இவருக்கு, செல்வி(36) என்ற மனைவியும் ரோகித்(15), கீர்த் தன்(12), ஜெய்ஷ்(6) ஆகிய மகன் களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் மகன் ரோகித்தை திருமங்கலத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு, வீட்டுக்கு பைக்கில் பாண்டியன் திரும்பிக் கொண்டிருந்தார்.
பாடி சீனிவாசன் நகர் மெயின் ரோடு, டாஸ்மாக் கடை அருகில் வந்து கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து இவரை வழிமறித்து வெட்டியது. படுகாயமடைந்த அவர் தப்பி ஓடினார். ஆனால் அந்தக் கும்பல், பாண்டியனை விரட்டிச் சென்று கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்து அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். கொலை நடந்த இடத் துக்கு மோப்ப நாய் டைசன் வர வழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய், பின் நின்று விட்டது.
பட்டப் பகலில் நடந்த இந்த கொலை தொடர்பாக கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக பாண்டியன் கொலை செய்யப் பட்டாரா அல்லது தொழில் போட்டியா? என்ற கோணத்தில் 3 தனிப்படை அமைத்து போலீஸார் குற்றவாளி களைத் தேடி வருகின்றனர்.