தமிழகம்

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ​முகூர்த்​தம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடு​முறை நாட்​களை முன்​னிட்​டு, சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்​டு, தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடுதலாக சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று (14-ம் தேதி) 80 பேருந்​துகளும், நாளை (15-ம்தேதி) 620 பேருந்​துகளும், 16-ம் தேதி 655 பேருந்​துகளும், சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்​களுக்கு நாளை மற்​றும் நாளை மறுநாள் 120 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து நாளை மற்​றும் நாளை மறு​நாள் 25 பேருந்​துகளும் மற்​றும் பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்​கும் 200 சிறப்பு பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்த வார இறு​தி​யில் இன்று 5,676 பயணி​களும், நாளை 10,853 பயணி​களும் சனிக்​கிழமை அன்று 8,421 பயணி​களும் மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை அன்று 9,759 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

இச்​சிறப்பு பேருந்து இயக்​கத்​தினை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு செய்​திக்​ குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் வசதியாக பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT