தமிழகம்

சென்னை டாஸ்மாக் பொது மேலாளர் உட்பட 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை டாஸ்மாக் பொது​மேலா​ளர் உட்பட தமிழகம் முழு​வதும் 16 மாவட்ட வரு​வாய் அலு​வலர்​கள் (டிஆர்ஓ) திடீர் இடமாற்​றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்​பாக தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் நேற்று வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தில் மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக (நில எடுப்​பு) பணி​யாற்​றும் பி.சைலேந்​திரன் மாற்​றப்​பட்​டு, சிவகங்கை மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக நியமிக்​கப்​படு​கிறார்.

சென்னை மாநக​ராட்​சி உதவி ஆணை​யர் (பொது நிர்​வாகம் மற்​றும் பணி​யாளர் பிரிவு) உமாமகேஸ்​வரி ராமச்​சந்​திரன் இடமாற்​றம் செய்​யப்​பட்​டு, நில நிர்​வாக இணை ஆணை​ய​ராக பணி​யமர்த்​தப்​படு​கிறார்.

விழுப்​புரத்​தில் நெடுஞ்​சாலை சிறப்பு மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக (நில எடுப்​பு) பணி​யாற்​றும் டி.அம்​ப​யி​ரானந்​தன் மாற்​றப்​பட்டு சென்னை விமான நிலைய விரி​வாக்க திட்ட சிறப்பு மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக (நில எடுப்​பு) பணி​யமர்த்​தப்​படுகிறார்.

சென்​னை​யில் தமிழ்​நாடு சுகா​தார முறை திட்ட மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக பணிபுரி​யும் கே.மணி​கண்​டன் இடமாற்​றம் செய்​யப்​பட்​டு, விழுப்​புரம் நெடுஞ்​சாலை சிறப்பு மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக (நில எடுப்​பு) பணி​யமர்த்​தப்​படு​கிறார்.

சென்​னை​யில் மருத்​து​வக் கல்வி கூடு​தல் இயக்​குந​ராக பணி​யாற்​றிய எஸ்​.​பானு, தமிழ்​நாடு சுகா​தார முறை திட்ட மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக நியமிக்​கப்​படு​கிறார்.

செய்​யாறு சிப்​காட் சிறப்பு மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக (நில எடுப்​பு) பணிபுரிந்து வரும் வி.​விமல்​கு​மார், சென்​னை​யில் சமூகநீ​தித் ​துறை​யின் மாநில ஆய்​வுக்​குழு உறுப்​பினர்​-செயல​ராக பணி​யமர்த்​தப்​படு​கிறார்.

சென்​னை​யில் தமிழ்​நாடு நுகர்​ பொருள் வாணிப கழக பொது மேலா​ள​ராக (வணி​கம்) பணி​யாற்​றும் எஸ்​.சிவ​ராம்திருச்சி ஒழுங்கு நடவடிக்​கைகள் ஆணை​ய​ராக நியமிக்​கப்​படு​கிறார்.

சென்​னை​யில் டாஸ்​மாக் பொது மேலா​ள​ராக (விற்​பனை) பணிபுரி​யும் டி.​முத்​து​ராமலிங்​கம் மாற்​றப்​பட்​டு, சென்னை மாநக​ராட்சி மாவட்ட வரு​வாய் அலு​வல​ராக (நிலம் மற்​றும் எஸ்​டேட்) நியமிக்​கப்​படு​கிறார். இவ்​வாறு 16 பேர் மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT