தமிழகம்

ஜெ. வழக்கு தீர்ப்பு எதிரொலி: கோபாலபுரம் கருணாநிதி வீட்டு எதிரே அதிமுக - திமுகவினர் மோதல்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டு எதிரே அதிமுகவினரும் திமுகவினரும் மோதலில் ஈடுபட்ட தால் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப் பினரும் சரமாரியாக கல்வீசித் தாக்கிக்கொண்டதில் திமுக நிர்வாகி காயமடைந்தார். போலீஸார் குவிக்கப்பட்டு, இருதரப் பினரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. இதையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணா நிதியின் வீட்டில் திமுக தொண்டர் கள் ஏராளமானோர் திரண்டனர். கருணாநிதியின் வீட்டுக்குச் செல்லும் சாலையில் போலீஸா ரும் அதிக அளவில் குவிக்கப்பட் டிருந்தனர்.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல இடங் களிலும் அதிமுகவினர் வன்முறை யில் ஈடுபட்டனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக கோபாலபுரம் பகுதி வழியாக பிற்பகல் 2.45 மணி அளவில் வந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கருணாநிதி வீட்டு எதிரே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.

அதிமுகவினரின் கல்வீச்சுத் தாக்குதலில், எழும்பூர் 104-வது வட்ட திமுக பகுதிப் பிரதிநிதி இரா.தர் மீது கல் விழுந்தது. இதில், அவரது கண்ணுக்கு அருகே தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அவரை கட்சியினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் இணை கமிஷனர் சங்கர், மயிலாப்பூர் துணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி தலைமையிலான போலீஸார், இரு தரப்பின ரையும் விரட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம் அருகில் அதிமுகவினர் வராதபடி, வெளிச் சாலைகளில் போலீஸார் தடுப்பு அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

அதிமுகவினர் மீண்டும் வந்தால் அவர்களுக்கு எதிர்த்து தாக்குதல் நடத்த திமுகவினர் உருட்டுக் கட்டைகள், கம்பிகளுடன் கருணா நிதியின் இல்லம் முன்பு கூடியிருந் தனர். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி அவர் களையும் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அறிவாலயத்திலும் நேற்று காலையில் இருந்தே திமுக வினர் ஏராளமானோர் கூடியிருந்த னர். காலை முதலே ஜெயலலிதா வுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டபடி இருந்தனர். ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆண்டு சிறை தண்டனை என்று அவ்வப்போது கோஷமிட்டனர்.

SCROLL FOR NEXT