எம்.ஏ.எம்.ராமசாமி கூட்டிய ஐயப்பன் கோயில் அறக்கட்ட ளைக் கூட்டத்தை அவரது வளர்ப்பு மகனும் அறக்கட்டளை அங்கத்தி னருமான ஐயப்பன் என்கிற முத் தையா புறக்கணித்தார்.
எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் இடை யிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ராஜா சர் அண்ணாமலைச் செட்டி யார் பிறந்த நாள் விழா செப்டம்பர் 30-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அவர் பெயரிலான நினைவு அறக்கட்டளையின் செயலாளர் பொறுப்பிலிருந்த ஏ.ஆர்.ராமசாமியை, முத்தையா நீக்கிவிட்டதாகச் கூறப்படுகிறது.
80 வயதான ஏ.ஆர்.ராமசாமி, எம்.ஏ.எம்.ராமசாமியின் அப்பச்சி (தந்தையார்) முத்தையா செட்டியார் இருந்தபோதே முக்கிய அறக்கட்டளைகளுக்கு செய லாளராக நியமிக்கப்பட்டவர். அப் படிப்பட்டவரை அறக்கட்டளை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி இருப்பது எம்.ஏ.எம். வட் டாரத்தை அதிர்ச்சியடைய வைத்தி ருக்கிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய செட்டிநாட்டு அரண்மனை வட்டாரத்தினர், “வழக்கமாக, அண் ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் விழாவில் முத்தையா தான் வரவேற்புரை நிகழ்த்துவார். ஆனால், இந்த முறை எம்.ஏ.எம். வரவேற்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமக்கு தெரியாமல் செய்யப்பட்ட இந்த மாற்றத்தால் ஆத்திரமடைந்த முத்தையா, ஏ.ஆர்.ராமசாமியை ராஜினாமா செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, செட்டிநாட்டு அரண்மனைக்குச் சொந்தமான திருமண மண்டபங்கள், இதர வாட கைக் கட்டிடங்களை நிர்வகிக்கும் வெலிங்டன் அறக்கட்டளையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் எம்.ஏம்.எம். இந்த அறக்கட்டளை சம்பந்தப் பட்ட நிதிகள் வேறு சில நிறுவனங் களுக்கு திருப்பி விடப்பட்டிருந் ததைக் கண்டறிந்து அதையும் இழுத்துப் பிடித்து விட்டார் எம்.ஏ.எம்.” என்று சொன்னார்கள்.
அடுத்தடுத்து அறக்கட்டளைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்ட எம்.ஏ.எம்., ஐயப்பன் கோயில் அறக்கட்டளைக் கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முத்தையா புறக்கணித்துள்ளார். மேலும், தன் வசம் வைத்திருந்த ஐயப்பன் கோயில் சம்பந்தப்பட்ட நகைகள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அண்மையில் எம்.ஏ.எம். தரப்பிடம் ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அரண்மனை வட்டாரத்தினரோ, “முத்தையா, தனியாக அறக்கட்ட ளைக் கூட்டத்தை கூட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதைப் பொறுத்து எம்.ஏ.எம்-மும் சில முக்கிய முடிவுகளை எடுப்பார்” என்றனர். இதனிடையே, தனக்குச் சொந்தமான ரேஸ்கோர்ஸ் பொதுக்குழு கூட்டத்தையும் நேற்று மாலை கூட்டிய எம்.ஏ.எம்., சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.