தமிழகம்

மாபெரும் இயக்கத்தை அடகு வைத்து விட்டனர்: அதிமுக மீது தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியை மோடியிடம் அடகு வைத்துவிட்டனர் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டினார்.

வேலூர் மாவட்டத்தில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் என்.ஜி. பார்த்திபன், சோளிங்கர் இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் டி.ஜி.மணி ஆகியோரை ஆதரித்து பேசும் போது, ‘‘நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நல்ல சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அமமுக என்பது அதிமுகவின் ஒரு அணியாக செயல்படுகிறது. அமமுகவுக்கு தமிழகத்தில் கிளைகள் இல்லாத ஊரே இல்லை.

ஒரு மாபெரும் இயக்கத்தை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த ஆட்சியை மோடியிடம் அடகு வைத்து விட்டனர்.

அதிமுகவில் ஒரு உறுப்பினர் வேறு கட்சியில் இருந்தால் அவரது உறுப்பினர் பதவி தானாக போய்விடும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 36 சுயேச்சை சின்னத்தை மின்னஞ்சலில் அனுப்பி தேர்வு செய்யுமாறு கூறியிருந்தனர். அதில் பார்த்த வுடன் பரிசுப் பெட்டகத்தை சின்னமாக பெற முடிவு செய்து தகவல் தெரிவித்தேன்.

நம்மால் ஆட்சியில் அமர்ந்தவர்கள் நமக்கும் துரோகம் செய்துதமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்கின்றனர். மோடியுடன் சமரசம் செய்திருந்தால் நான்முதல்வராகி இருப்பேன். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்ய மாட்டேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT