தமிழகம்

11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்; புகைப்பட வாக்காளர் சீட்டு அடையாள ஆவணமாக ஏற்கப்படாது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 

செய்திப்பிரிவு

மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் வாக்களிக்க புகைப்பட வாக் காளர் சீட்டு அடையாள ஆவணமாக ஏற்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலில், வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் வாக் காளர் புகைப்பட அடையாள அட்டையை தனது அடை யாளத்தை மெய்ப்பிக்க அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாவிட்டால், வேறு 11 ஆவணங்களை அளிக்கலாம்.

அதன்படி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப் பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அலுவலக அடை யாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை காட்டி வாக்களிக்கலாம்.

இதற்கு முந்தைய தேர்தல் களில் தேர்தல் ஆணையம், புகைப்பட வாக்காளர் சீட்டை அடையாளத்துக்கான ஆவணமாக அனுமதித் திருந்தது. அந்த ஆவணம் வாக்காளர் பட்டியலை இறுதி செய்த பின், தேர்தல் நாளுக்கு சற்று முன்னர் வழங்கப்படுவதால், தனித்த அடையாளத்துக்கான ஆவண மாக பயன்படுத்துவதற்கு எதிராக புகார்கள் வந்தன.

மேலும், இதற்கு முன் புகைப்பட அடையாள அட்டை முழுமையாக வழங்கப்படாத தால் வாக்காளர் சீட்டு வழங் கப்பட்டது. தற்போது 99 சதவீதம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது.

ஆதார் அட்டை

அதே போல், 99 சதவீதம் வயது வந்தோர் ஆதார் அட்டையையும் பெற் றுள்ளனர். இதன் அடிப்படை யில், புகைப்பட வாக்காளர் சீட்டு இனி ஆவணமாக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆனால், வாக்காளர்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அந்த புகைப்பட வாக்காளர் சீட்டு அச்சிடப்படும். இது ஆவணமாக ஏற்க மாட்டாது என்பதற்கான வாசகம் அதில் இடம்பெறும்.

ஒரு வேளை ஒரு வாக்காளர் வேறொரு சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத் திருந்தால், அந்த அடையாள அட்டையையும் பயன்படுத்த லாம். ஆனால், அந்த வாக் காளர் பெயர், அவர் இருக்கும் பகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், அடையாள ஆவணம் வைத்திருந்தாலே ஒருவர் தனது வாக்கை செலுத்த முடியாது. அவரது பெயர் சம்பந்தப்பட்ட பகுதி வாக் காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவ ராவார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT