சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி தொண்டர் ஒருவரிடம் ஆவேசேமாக பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த ஆடியோவை முன்வைத்து வைத்து பல்வேறு தரப்பினரும் சீமானை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் காளியம்மாள் தனியார் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
‘‘வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் மீனவர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் என்று என்னை போன்ற ஒரு சாதாரண மீனவப் பெண்ணை சீமான் இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளார்.” இவ்வாறு காளியம்மாள் கூறினார்.
மேலும் சீமான் ஆடியோ சர்ச்சை குறித்து பேசிய அவர்,
“முதலில் நாம் விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அடிமட்ட தொண்டன் சரிசமமாக தலைவரிடம் தொலைபேசியில் உரையாடும் சுதந்திரம் எங்கள் கட்சியில்தான் உள்ளது. இந்த விவகாரத்தை நல்லவிதமாக அணுகினால் நல்ல விஷயமாக தெரியும். குற்ற உணர்வோடு அணுகினால் தவறான விஷயமாக தெரியும்” என்று கூறினார்.