தமிழகம்

10 மாவட்டங்களில் சதம் அடிக்கும் வெயில்; வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

பத்து மாவட்டங்களில் இன்று வெப்பம் 100 டிகிரியைத் தாண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இதுகுறித்து தெரிவித்ததாவது:

வெப்பத்தின் அளவு இன்று (31.3.19) அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் சென்னையில் இன்று வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

மேலும் இந்த மாவட்டங்களில் வெப்ப அளவு 100 டிகிரியைத் தாண்டும். காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், வெப்பத்தின் அளவு அதிகரித்திருக்கிறது.

மார்ச் 28ம் தேதி அன்று சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் 96 டிகிரி வெப்பமும் மீனம்பாக்கம் பகுதியில் 101 டிகிரி அளவு வெப்பமும் இருந்தது. அதேபோல், இன்று சென்னையில் வெயிலின் அளவு சதம் அடிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT