தமிழகம்

பரிசுப் பெட்டி அல்ல; காலிப் பெருங்காய டப்பா: தினகரன் கட்சி சின்னம் குறித்து அமைச்சர் கிண்டல்

ஸ்கிரீனன்

பரிசுப் பெட்டி அல்ல; காலிப் பெருங்காய டப்பா என்று தினகரன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த அறிவிப்பு வெளியானதும், தினகரன் கட்சியினர் முழுவீச்சில் தங்களுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருப்பது தொடர்பாக, உசிலம்பட்டியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:

அந்த பரிசுப் பெட்டகத்தை திறந்துப் பார்த்தால் பரிசும் இருக்காது, ஒன்றும் இருக்காது. அது காலி பெருங்காய டப்பா. அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தச் சின்னத்தை அவர் மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன் தேர்தல் முடிந்துவிடும்.

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT