தமிழகம்

லிப்ட் கேட்டு செயின் பறிப்பு: இளைஞருக்கு தர்ம அடி - தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்

செய்திப்பிரிவு

பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய இளைஞர் பைக் ஓட்டிச்சென்றவரின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டுவிட்டு ஓடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலைய ஊழியர் வெங்கடேசன் (48). சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் வசிக்கிறார். வியாழக்கிழமை மாலை சாப்பிடுவதற்காக வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். பாரதமாதா சாலையில் சென்றபோது ஒரு இளைஞர் லிப்ட் கேட்க, வெங்கடேசன் வண்டியை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டார்.

சிறிது தூரம் சென்ற நிலையில், வெங்கடேசனின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு, அந்த இளைஞர் பைக்கில் இருந்து குதித்து ஓடினார். வெங்கடேசன், ‘திருடன் திருடன்’ என்று கத்த, அருகே இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சேலையூர் போலீஸில் ஒப்படைத் தனர். அவர் திருவான்மியூரை சேர்ந்த டைட்டஸ் (18) என்பதும் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுவந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

2 பெண்களிடம் செயின் பறிப்பு

கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 3-வது பிரதான சாலையை சேர்ந்த வர் செல்வமணி (62). இவரது மனைவி ரோஸ் (59), பொருட்கள் வாங்குவ தற்காக வியாழக்கிழமை இரவு கடைக் குச் சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் ரோஸ் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துச் சென்று விட்டனர்.

நங்கநல்லூர் எம்.எம்.டி.பி. காலனியை சேர்ந்தவர் சரஸ்வதி (60). அருகே உள்ள பிள்ளையார் கோயி லுக்கு வியாழக்கிழமை இரவு சென்றார். அப்போது, பைக்கில் வந்த ஒருவர் சரஸ்வதியின் 6 பவுன் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT