தென்காசியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கைரீதியான கூட்டணி. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறும்.
பல நெருடல்களையும், முரண்பாடுகளையும் உள்ளடக்கியது பாஜக கூட்டணி. தமிழகத்தில் அதிமுகவை பயமுறுத்தி பணியவைத்து கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி மூழ்குகின்ற கப்பல்.
ராணுவ வீரர்கள் இந்திய மக்களுக்கு பொதுவானவர்கள். யுத்தத்தை காட்டியோ அல்லது உயிர் இழந்த வீரர்களின் படங்களை காட்டியோ தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை வரவேற்கிறோம். ரஃபேல் போர் விமானத்தில் மத்திய பாஜக அரசு மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்வோம். செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.