ரயில் தண்டவாளம் இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் வரும் 30, 31-ம் தேதிகளில் நடக்க உள்ளன. இதனால் தாம்பரம் மற்றும் வேளச்சேரி தடத்தில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே 3, 4-வது தண்டவாள பாதை இணைப்பு பணிகள் 30-ம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை நடக்க உள்ளதால் அத்தடத்தில் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
அதேபோல், தாம்பரம் தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்திலும் சில ரயில் சேவை கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரையில் இருந்து வேளச் சேரிக்கு மாலை 6.55, 8.20, 8.40, 9, 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப் படுகின்றன. திருவள்ளூரில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 7.25, 9.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு இரவு 7.30, 8.30, 8.50 மணிக்கு இயக் கப்படும் ரயில்களும், அதேபோல் வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 8.10, 9.10, 9.30, 9.50, 10.10 10.50, 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 7.48, 8.04, 8.28, 8.44, 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மின்சார சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு காலை 6, 6.20, 6.40, 7, 7.20, 7.40, 8, 8.20, 8.40, 9 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு காலை 6.50, 7.10, 7.30, 7.50, 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50 இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 6.55, 7.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 4.02 மணி முதல் 9.15 மணி வரையில் கடற்கரைக்கு இயக்க வேண்டிய பெரும்பாலான ரயில்கள் பூங்கா ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.