தமிழகம்

மதுரை சித்திரைத் திருவிழா, பெரிய வியாழனை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரை சித்திரைத் திருவிழா மற்றும் பெரிய வியாழன் தினத்தை முன் னிட்டு தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கவிருப்பதால் ஏப்ரல் 18-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மக்கள வைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என வழக்கறிஞர் பார்த்த சாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந் திருந்தார். இதேபோல கிறிஸ்த வர்களின் பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவப் பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடி களை மாற்றக்கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பாப்புசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருந்திருந்தார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாக அறங்காவலர் இனிகோ இருதய ராஜூம் தேர்தல் தேதியை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வாக்குப் பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், தேர் தலை முறையாக நடத்த தேவை யான ஏற்பாடுகளை செய்துள்ள தாகவும், தமிழக அரசு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதன்பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணை யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பக்தர்களுக்கு வசதி

மேலும் பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு தேர்தலன்று தேவாலயங்களுக்கு செல்லும் பக்தர்களுக்காக தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT