தமிழகம்

மதுரை வாகன சோதனையில் சிக்கிய ரூ.15 கோடி தங்கம்: தினமும் சிக்குவதால் அதிகாரிகள் அதிர்ச்சி 

செய்திப்பிரிவு

மதுரையில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்க நகை கள் சிக்கின.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்.18-ல் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 30 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், நேற்று முன் தினம் வரை ரூ.4.34 கோடி மதிப்பி லான நகை, பணம் சிக்கியது. சிட்டம் பட்டி டோல்கேட் அருகே நேற்று முன்தினம் நடந்த சோதனையில் 12 கிலோ தங்கம் சிக்கியது. 3 நாட் களுக்கு முன்பு நடந்த சோதனை யில் வேனில் பெட்டி, பெட்டியாக நகைகள் சிக்கின. ஆய்வில் கவரிங் நகை என்பது தெரிந்ததால் அவை விடுவிக்கப்பட்டன.

நேற்று அதிகாலை சமயநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே தோட்டக்கலைத் துறை அலுவலர் விஜயா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, சேலத்தில் இருந்து மதுரை வந்த வேனில் சோதனை செய்த போது அதில் பெட்டி, பெட்டியாக தங்க நகைகள் இருந்தன.

இதுகுறித்து அலுவலர்கள் கூறும்போது, ‘‘சேலத்தில் தயாரிக் கப்பட்ட நகைகளை மதுரை யில் உள்ள பல்வேறு கடைகளுக்கு வழங்கக் கொண்டு வந்துள்ளனர். ஒவ்வொரு பெட்டியிலும் 1 கிலோ வுக்கும் மேல் நகைகள் உள்ளன. மொத்தம் 45 பெட்டிகளில் 50 கிலோ வுக்கும் அதிகமான நகைகள் உள் ளன. இதன் சந்தை மதிப்பு ரூ.15 கோடிக்கும் அதிகம். இதுகுறித்து வருமானவரித் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது'’ என்றனர்.

மதுரையில் தினசரி வாகனச் சோதனையில் தங்கம் சிக்குவது தேர்தல் அதிகாரிகளுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சில வாகனங்களைச் சோதனையிட்ட போதே இதுவரை 65 கிலோ வரை நகைகள் சிக்கியுள்ளன. பலசரக்கு களைப் போல் பெட்டி, பெட்டியாக தங்கத்தை சர்வ சாதாரணமாக கொண்டு செல்கின்றனர். அனைத்து வாகனங்களையும் சோதனையிட் டால் எவ்வளவோ சிக்கும். இவ்வ ளவு தங்கம் மதுரைக்குள் வந்து செல்வது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இவற்றுக்கு வரி செலுத்தப்படுகிறதா என வருமான வரித் துறைதான் கண்காணிக்க வேண்டும்' என்று கூறினர்.

SCROLL FOR NEXT