தமிழகம்

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு  ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங். அரசு நிறைவேற்றும்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி 

செய்திப்பிரிவு

நாட்டில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங் கும் குறைந்தபட்ச வருமான உத்தர வாதத் திட்டத்தை காங்கிரஸ் அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு புரட்சிகரமான திட் டத்தை அறிவித்துள்ளார்.இத்திட் டத்துக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் தரப் பட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித் திருக்கிறது. காந்தியின் கனவை நன வாக்குவதே இத்திட்டத்தின் நோக் கமாகும். கடைசி மனிதனின் கண் களில் வழியும் கண்ணீரை துடைப் பதுதான் நமது நோக்கம் என்று காந்தி சொன்னார். வறுமையில் உள்ள குடும்பங்களுக்காக இத்திட் டம் கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் 5 கோடி குடும்பங் களுக்கு இத்திட்டத்தால் பயன் கிடைக்கும். ஒரு குடும்பத்துக்கு 5 உறுப்பினர்கள் என்று எடுத்துக் கொண்டால் 25 கோடி மக்களை இத் திட்டம் போய்ச்சேரும். எல்லா குறியீடுகளையும், புள்ளி விவரங் களையும் கணக்கில் எடுத்த பிறகு இறுதியாக நாங்கள் எடுத்த முடிவு என்ன வென்றால், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தரவேண்டும். அதாவது மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் தர வேண்டும் என்பதுதான்.

இத்திட்டத்தை வடிப்பதற்கு அறிஞர், நிபுணர் குழு அமைக்கப் படும். ஆட்சிக்கு வந்த மறுநாளே இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்று சொல்ல வில்லை. படிப்படியாக செயல் படுத்தப்படும் என்றுதான் கூறுகி றோம். 1991-ல் சிறந்த பொருளாதாரக் கொள்கையை காங்கிரஸ் கட்சி அமல்படுத்தியது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பொருளா தாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி 200 லட்சம் கோடி. ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி ஏற்படும். 5 ஆண்டுகளில் அது 400 லட்சம் கோடியை எட்டும். மத்திய, மாநில அரசுகளின் வருவாய், செலவினங்களைக் கணக்கிட்டால், இன்றைய வருவாய் என்பது 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். ஆகவே, இந்த காலக்கட்டத்தில் இத்திட்டத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

100 நாள் வேலைவாய்ப்பு திட் டத்தை அறிவித்தபோது, அதைச் செயல்படுத்த முடியாது என்றார் கள். அதை செயல்படுத்திக் காட்டி னோம். இப்போது அறிவிக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டத்தை காங்கிரஸ் அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்பதை காங்கிரஸ் தலைவர் சார்பில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்.2-ம் தேதி வெளியிடப் படும் என நினைக்கிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

SCROLL FOR NEXT