தமிழகம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணிநியமன ஆணை

செய்திப்பிரிவு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாவட்டத்துக்குள் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு 795 பேருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இதர மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கான கலந்தாய்வு நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு இரவு 9 மணிக்கு மேல் நீடித்தது. இரவு 8 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 450 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பணி ஒதுக் கீட்டு ஆணை பெற்றுக்கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் நாளை (4-ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியிடம் பணிநியமன உத்தரவை பெற்றுக்கொள்ளவும், 8-ம் தேதி பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொடக்ககல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT