வாக்குச்சாவடி மையங்களில் வாக் களிக்க வரும் விஐபிக்களுக்கு வாக் குப்பதிவு அலுவலர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது, சிறப்பு கவனிப்பு செய்வது கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப் பான உத்தரவைப் பிறப்பித்துள் ளது.
வாக்குச்சாவடி மையங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரியும், அவருக்குக் கீழ் பணிபுரியும் வாக் குப்பதிவு அலுவலர்கள் (பி-1, பி-2, பி-3), பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி தேர் தல் ஆணையம் அறிவுறுத்தி உள் ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
வாக்குப்பதிவு அலுவலர் கள் மற்றும் முகவர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போனில் பேசு வது, புகைபிடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு வரும் விஐபிகளுக்கு வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்கள், அவர்களுக்கு எழுந்து நின்று சிறப்பு உபசரணைகள் செய் யக்கூடாது. எழுந்து நின்று வணக்கம் செலுத்தக்கூடாது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் வாக்குச்சாவடி தலைமை அலுவ லர், முகவர்களின் முன்னிலையில் மட்டுமே அதை சரி செய்ய வேண்டும்.
பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் அரசியல் கட்சி முகவர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே செல்லவோ மீண்டும் உள்ளே வரவோ அனுமதிக்கக் கூடாது. வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் ஒருவருக்கொருவர் அரசியல் மற்றும் இதர விமர்சனங்கள் பேசக்கூடாது.
வாக்குச்சாவடிப் பாதுகாப் பில் ஈடுபடும் போலீஸார், வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் மட்டுமே வாக்குச் சாவடிக்குள் செல்ல வேண்டும். அவரது அனுமதியின்றி தன் பணியிடத்தை விட்டு செல்லக் கூடாது.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் புகைப் பட அடையாள அட்டை அல் லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் சிலிப் கொண்டு மட்டுமே வாக்களிக்க முடியும். பிற ஆவ ணங்களை அடையாளத்துக்குப் பயன்படுத்த முடியாது.
‘மை’ வைக்கும் முறை
வாக்காளர்கள் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்துக் கும், தோலுக்கும் மத்தியில் அழியாத மை (Indelible ink) வைக்க வேண்டும்.
இடது கையில் விரல்களே இல்லாதபட்சத்தில் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்க வேண்டும். அந்த விரலும் இல்லையெனில் அதற் கடுத்த விரலில் மை வைக்க வேண்டும்.
இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாதவர்களுக்கு இடது கை மணிக்கட்டில் வைக்க வேண்டும். இரண்டு கைகளுமே இல்லாதவர்களுக்கு இடது கால் விரலில் மை வைக்க வேண்டும். வாக்குச்சாவடி மையம் வரை வந்தும் வாக் களிக்க இயலாத அளவுக்கு உடல்நிலை உள்ளவர்களுக்கு, வாக்குச்சாவடி மைய தலைமை அலுவலர், வாக்கை பதிவு செய்ய உதவி செய்வார்.