திருச்சி விமானநிலையத்தில் ரூ.27.51 லட்சம் மதிப்பிலான 849 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்கள், அவர்களின் உடமை களை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த யாசர் அராபத் (22) என்பவர் கொண்டு வந்த கைப்பையையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.27.51 லட்சம் மதிப்பிலான 849 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாசர் அராபத்திடம் சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.