விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மோதிரம் சின்னம் வழங்கப்படவில்லை. வேறொரு கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, நட்சத்திரம், மெழுகுவர்த்தி முதலான சின்னங்களில் போட்டியிட்டுள்ளன. ஆனாலும் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, மோதிரம் சின்னம் நிலைத்து நின்றதாகத் தெரிவிக்கின்றனர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகொள் விடுக்கப்பட்டது.
இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதில் விடுதலை சிறுத்தைகள் கேட்டுக்கொண்ட மோதிரம் சின்னம் வழங்கப்படவில்லை. தமிழக இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் வழங்கி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து, வேறு எந்தச் சின்னம் கேட்பது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.