தமிழகம்

வறட்சி மாவட்டங்களாக 24 மாவட்டங்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளது:

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழையளவு ஆய்வு செய்யப்பட்டது. அதில், கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் அதிக பற்றாக்குறை என்ற அளவில்தான் மழையை பெற்றுள்ளன. அப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால், கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த 38 வட்டாரங்கள் நீரியல் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

அதுபோல, குறைந்தளவு மழை பெற்றுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம் பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண் ணாமலை, அரியலூர், நாகப்பட்டி னம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களாக அறிவிக்கப்படு கின்றன. இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT