சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக கட்சியினர் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல இடங்களில் வன்முறை நிழந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், தமிழக அரசு உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வன்முறை யைத் தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.