தமிழகம்

மோடியை யாரும் பழிவாங்க முடியாது அவரை அவரே பழிவாங்கிக் கொள்வார்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

செய்திப்பிரிவு

ஆதரவற்ற பெண் குழந்தைகளின் வளர்ச்சித் திட்டத்துக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, 5 ஆண்டுகளாக வெறும் பிரச்சாரம் மட்டுமேதான் பிரதமர் மோடி செய்து வந்துள்ளார் என்று சாடினார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் கேட்டால் எதிர்க்கட்சிகளை தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறுவது தவறு என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “யாரும் அவரை (மோடியை) பழி வாங்க முடியாது, அவரே அவரை பழிவாங்கிக் கொள்வார், நாங்க செய்ய வேண்டிய தேவையேயில்லை.

நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துங்கள் என்று கூறும் பிரதமர் 5 ஆண்டுகளை வீணடித்து விட்டார்.  5 ஆண்டுகளாக வளர்ச்சி எதுவும் இல்லாம தொடர்ந்து 5 வருஷமா தேர்தல் பிரச்சாரம் மட்டுமே செய்து கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட பிரதமர் இந்த நாட்டுக்குத் தேவையா என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” என்றார் நாராயண சாமி

SCROLL FOR NEXT